புதன், 29 ஜூன், 2011

உறவு

பல இடங்களில் , பல சமயங்களில்  கேட்கப்படும் கேள்வி , நண்பர்கள் முக்கியமா அல்லது உறவினர்கள் முக்கியமா? பெரும்பாலான பதில்கள் நண்பர்கள் என்றே வரும். நண்பர்கள் எப்போதும் நல்லவர்கள், உதவி செய்பவர்கள்  ஆனால் உறவினர்கள் எப்போதும் பொறமை கண்களோடு இருப்பவர்கள், நன்றி மறப்பவர்கள் மற்றும் உறவினர்கள்  என்றால் எப்போதும்
சண்டை சச்சரவுகளே ! என்றுதான் பதில் வரும்.

ஆனால் நண்பர்கள்,உறவினர்கள் என்று பாராமல் சாதாரண ஆள்  என்று பார்த்தால், அனைவரும் சராசரி ஆட்களே!

அதாவது  ஒருவனுடைய நண்பன் மற்றொருவருடைய உறவினர் ஆகிறான். ஒரு சராசரி ஆள் தனது தனது உறவினருக்கு வேண்டாத ஆளாகவும், தனது நண்பருக்கு வேண்டியவராகவும் தெரிவது ஏன்?

பல்வேறு கட்டங்களில் பல்வேறு மனிதர்களையும்,உறவினர்களையும் வந்து போகின்றனர்.
ஒவ்வரு கட்டத்திலும் அடுத்தவர்களுக்கு  கொடுக்கப்படும் முக்கியத்துவமும் மாறுபடுகிறது, முக்கியத்துவம் கொடுக்கபடுகின்ற ஆட்களும் மாறுபடுகிறார்கள். இந்த கால மாறுதலில் ஆரம்பிகிறது உறவுகளுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகள்...

பல்வேறு கட்டங்களில் பிரச்சனைகள் தோன்றினாலும் , திருமண கட்டத்திற்கு பிறகு, உறவுகளிடையே தவறான புரிதல்களும் , பிளவுகளும் அதிகம். புதிய பெண் அல்லது புதிய ஆண் குடும்பதிருக்குள் வருவதால் ஏற்படும் பிரச்சனிகள் உண்மையில் குறைவு. அனால் ஒரு புதிய குடும்பம் புதிதாக உள்புகும் போது உண்டாகும் விரிசல்கள் அதிகம். பல புதிய உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க படுகிறது, ஏற்கனவே இருக்கின்ற சில உறவுகள் பின் தள்ள படுகிறது. இதை தவிர்க்கவும் முடியாது, உறவுகளில் முக்கியத்துவம் மாறுபடுவதும் தவறும் இல்லை. ஒவ்வர்வருக்கும்  இந்த அனுபவம் இருக்கும்.  எல்லோருக்கும்  இதற்க்கு உதாரணமும் கிடைக்கும்.


இந்த முக்கியத்துவங்கள் மாறுபடுவதால் உள் அடக்கி வைக்கப்படும் வருத்தமும், கோபமும் சிறு சிறு சண்டைகளாக வெளி வர ஆரம்பிக்கும். பிறகு கால ஒப்பீடு செய்து மனம் ஓடும். "அப்படி இருந்தவன், நான் இது எல்லாம் செய்து இருக்கிறேன்.. இப்போது கண்டுகொள்வதில்லை"  இந்த எண்ணம் ஆரம்பித்து சில மாதங்கள் அல்லது சொற்ப வருடங்களில் பெரிய அளவிலான வாக்குவாதமும் அல்லது மன வருத்தமும் வந்து உறவின் இடைவெளி ஆரம்பித்து விடுகின்றது. கால் ஓட்டத்தில் அனைவருக்கும் தனி குடும்பம் அமைந்து அனைவருக்கும் " நான் மட்டுமே நினைத்து பார்க்கிறான்.. அவன்/அவள் நினைத்து கூட பார்க்க மாட்டன்" என்று சில உறவுகள் முற்றிலும் சிதைந்து விடுகின்றது.


நண்பர்களிடத்தில் இந்தி பிரச்சனைகள் ஏற்பட்டாலும்.. உறவுகளிடத்தில் ஒப்பிட்டு பார்க்கும்போது இங்கு குறைவு. ஒரு கட்டத்தில் எதிர்பார்ப்புகளும் குறைந்து விடுகின்றது. வேலை,குடும்பம் காரணாமாக இருக்கும் தூரமும் அதிகரிக்கிறது. அதனால் மின் அஞ்சல்,தொலைபேசி தொடர்புகளால் சண்டைகள் ஏற்படுவதில்லை. எப்போதாவது நேரில் பார்த்து கொள்ளும்போது  பழைய நல்ல நினைவுகளும், சிரிப்புகளும் மாறுமே மிஞ்சும். அனால் உறவினர் இடத்தில் அடிகடி சந்திக்க நேரிடும், குறிப்பாக இந்த நிகழ்சிகளில் ஏற்படும் பிரச்சனைகள் அதிகமாகவே இருக்கும்.

அளவோடு இருந்தால் அல்லது நிதர்சனம் புரிந்து உறவை தொடர்ந்தால் , நண்பனும் சரி சொந்தக்காரனும் சரி.. நல்ல உறவாகவே நீடிக்கும் .



3 கருத்துகள்:

Harinniy சொன்னது…

the statement in first para is quite contradictory!!!i dont think family is below friendship at any point of time!!friends may come and go but family is the only thing that stays all thru out one's lyf!!the rest of ur thread is absolutely true...and as u say its unfortunate that problems crop up within family in the due course of time..hope we ppl learn how to balance the various new relations that add on at various phases of life!!!

Guna சொன்னது…

Uravinargal appadeenu naan appa,amma,annan,thambi,thangcahiya sollala..

few problmatc reltvs r there always.. i am talking about them.. if all of ur relatives are good. thn its fine.. but i dont think so..i think after 10 yrs if you put your next comment for this postit ll b dfrnt

Harinniy சொன்னது…

yup..i too dint mean parents,bro or sis....as u said,lets see after ten yrs but then i hav confidence that my stand on this will not change :)