செவ்வாய், 13 செப்டம்பர், 2011

வெளிநாட்டு நண்பன்



வெளிநாட்டில் வேலை செய்ய போகும் நம்ம பீட்டர்  இங்க வரும்போது  , நன்றாக படித்தவர்கள் அல்லது  இவரை போலவே இங்கு வேலை செய்பவரிடம்  சொல்வது...



1. "என்ன இருந்தாலும் நம்ம நாடு மாதிரி வராது
2. "எப்படா  இந்திய வந்து உட்காருவோம்னு இருக்கு"
3."அங்க எல்லாம் இருக்கவே முடியாது, எப்படித்தான் அங்க இருக்காங்களோ "
4."திரும்பி போறதுக்கே எரிச்சலா இருக்கு"
5."என்னத்த காசு பணம் .. போதும்டா சாமி"


கொஞ்சம் பெரியவங்க , அவ்ளோவா  படிக்காம ஊர்ல  தொழில் பண்றவங்ககிட்ட சொல்வது ..

1. " அங்க இருக்குற சுத்தம், களைமட் மாதிரி இங்க இருக்கிறது இல்ல ...  இங்க வேஸ்ட் "
2. "எப்படா திரும்பி போவோம்னு இருக்கு"
3. "அங்க இருக்குற மாதிரி வொர்க் கல்ச்சர் இங்க இருக்குறது இல்ல "

 இப்படி இன்னும் நிறைய பேசுவார்.

    உண்மையில் பீட்டர் மனசுல ஓடுறது... " வெளிநாட்ல வேலை செஞ்சா இங்க இருக்கிற நம்ம   சொந்த பந்த / நண்பர்கள்கிட்ட இருக்குற கெளரவம் ஜாஸ்தி, வெளி நாட்டுல இருக்குறோம்னு  பெருமையா  சொல்லிக்கலாம் .. சொந்த நாட்டுல வேலை செய்யுற மத்தவங்க எல்லாரும் தனக்கு கீழதான்! அப்படி ஒரு நினைப்பு இருக்கும்  ... பணம் முக்கியம்.. பெருமை பீத்திக்கலாம். இதுதான் பீட்டரின் உண்மையான மனநிலை.

அங்கயேதான்  இருக்கணும்னு முடிவு பண்ணி இருந்தாலும், போக பிடிக்கவே பிடிக்கலன்னு இவங்க போடுற SCENE தாங்க முடியாது. ( ஒரு வேலை 
 அடுத்தவன் யாரும் தன்னை போல அங்க  வந்துட கூடாதுன்னு ஒரு எண்ணம் இருக்குமோ? அல்லது அங்க இருந்து எந்நேரம் வேணும்னாலும் தன்னை அனுப்பிடலாம் ,அப்படி அனுப்பிட்டா ,இங்க வரும்போது பார்க்குறவன் தன்னை ஏளனமா பார்ப்பான்னு இப்படி  அடிக்கடி சொல்லிக்கிட்டு , திரும்பி வரும்போது " நான்தான் அப்பவே சொன்னேன்ல நம்ம நாட்டுலதான் இருக்கணும்னு ,அதன் வந்தேன் " அப்படீன்னு சொல்லுறதுக்காக இருக்குமோ?!!!).

FACEBOOK ல அடிக்கடி  போட்டோ போடுறது இவங்களுக்கு பிடிச்ச விஷயம்.  தவறுதலா பேசுற மாதிரி இங்கிலீஷ்ல அடிக்கடி  பேசுவாங்க


       இது அமெரிக்கா,லண்டன்ல இருக்குற பீட்டரா இருந்தாலும் சரி , நேபால் பூட்டன் ல இருக்குற பீட்டரா இருந்தாலும் சரி.. எல்லாரும் இப்படித்தான் நினைக்குறாங்க/பண்ணுறாங்க.

( வெளிநாட்டுக்கு போய் அடிமட்ட வேலைய செஞ்சு குடும்பத்துக்காக பணம் சம்பாதிக்க போறவங்க இருக்காங்க , அவங்கள பத்தி இது அல்ல.)




















3 கருத்துகள்:

Harinniy சொன்னது…

exactly!!!adha vida anga irundhu inga vandhadhum tamil marandha madri oru scene poduvaangalae...apppapa!!!

Guna சொன்னது…

hummm.. enna panna? itha naama avangakitta thirupi sonna , avanga manasu kashtapaduvaangannu ,amaithiya aaguratha avanga advantage eduthuppanga... itha pathi serious a eluthanum..

Nadu Nisi Naai சொன்னது…

Nilai maarum ulagil nilaikkul endra kanavil vazhum manidha jaadhi adhil vazhvadhillai needhi!
Rwally if u ask me the trend now is not for earning money ppl are going there, its just to earn pride, dignity, social status, privacy from realtives/family and finally teh kind of comfort they get. I used to get tempted to replace their tooth whenever i happened/witnessed theirso excited , hyper over action once they come back.