செவ்வாய், 15 நவம்பர், 2011

பொறாமை


போட்டி இருந்தால்தான் முன்னேற முடியும் ; போட்டி இருக்கலாம் ஆனால் பொறாமை இருக்க கூடாது : இப்போதெல்லாம் பொறாமை இருந்தால் மட்டுமே போட்டி வருகிறது !!.


இந்த காலகட்டத்தில் பொறமை கூடாது , ஈகோ கூடாது என்றால் எதிலும் முன்னேற முடியாது . அடுத்தவர்களை ஒப்பிட்டு பேசாதே என்று சொல்லி நம்மை நாமே சமாதான படுத்தி கொள்வதும் இதே வகைதான்.

போரமைபடுவது,ஈகோ பார்ப்பது தவறு தான்.. ஆனால் இந்த தவறை செய்யாமல் இருந்தால் ஒன்று சுத்தமான நல்லவனாக இருக்க வேண்டும் .. அது சாத்தியமே இல்லாத ஒன்று. அதற்க்கு இந்த இரண்டு விஷயங்களோடு நேரங்களை  எதிர்கொள்வது நன்று.

இவை இரண்டுமே போட்டி ஆரம்பிக்க ஒரு உந்துதல். இவை இல்லாமல் வரும் போட்டி அதன் வீரியத்தை சீக்கிரமே இழந்து விட அதிகம் வாய்ப்பு உள்ளது . சரியான போட்டியை ஏற்படுத்த இவை இரண்டுமே காரணம் ஆகின்றன... போட்டி ஆரம்பித்தல் அடுத்தடுத்த படிக்கட்டுகளை நோக்கி கால்கள் தானாக செல்கின்றன.
போட்டியில் பொறாமை வந்தால் அடுத்து மனம் கேட்ட செயல்களை நோக்கி போகும் என்பார்கள் ...  போட்டியே போடாமல் வெறும் இயலாமையால் வரும் பொறாமை வேண்டுமானால் இந்த புத்தியாக மாறும் , ஆனால் அதுவும் எதுவும் செய்ய முடியாமல் நிற்கும்.

ஒரு நேர்முக தேர்விற்கு செல்லும்போது எவ்வவளவோ பேர் கட்டாயம் வேலை வேண்டும் என்று வருகிறார்கள் .. அவர்களுக்காக விட்டு தர வேண்டும் என்று தோணும? அனைவரையும் தாண்டி நாம் வெல்ல வேண்டும் என்றே தோணும் .இது சுயநலம் .

பொறாமை , ஈகோ ,சுயநலம் இது எல்லாமே ஒரு உந்துதல்தான்.. கெட்ட வார்த்தைகள் அல்ல . கீழே இருப்பவர்களை பார்த்து நம்மை சமாதான படுத்தி கொண்டால் .. "அடுத்து" என்ற வார்த்தையே மறந்து விடும் . மேலே இருப்பவர்களை பார்த்து பொறாமை கொண்டால்  மட்டுமே ..காலம் கழியும்போது  நம்மை பார்த்து அடுத்தவர்கள் பொறாமை பட ஆரம்பிப்பார்கள் .


























கருத்துகள் இல்லை: