வியாழன், 17 நவம்பர், 2011

விலை ஏற்றத்திருக்கு அடுத்த நடவடிக்கை?

 நூலகம் , மருத்துவமனையாக மாற்றம் .
பால் விலை 17 ரூபாயில் இருந்து  24 ஆக உயர்வு
ஈரோடு - சேலம் - 20  ரூபாயில் இருந்து 32  ஆக உயர்வு
ஈரோடு - கோயம்புத்தூர் - 28 இருந்து 45  ஆக உயர்வு
சென்னை மாநகராட்சியில் மூன்று மடங்காக உயர்வு.

வாழ்க அதிமுக அரசு ...  60  வயதிற்கு மேல் உள்ளவர்கள் அனைவருக்கும் பேருந்து கட்டணம் இலவசம் என்ற தேர்தல் வாக்குறுதி இனி வரும் .  உண்மையாக இவர்கள் உயர்த்த நினைத்த விலை உயர்வை மக்களின் போராட்டங்களுக்கு பிறகு , தற்போது அறிவித்து இருக்கும் உயர்வில் இருந்து குறைப்பதாக காட்டி சாதித்து கொள்வார்கள்.வழக்கம் போல நாமும் நம் வேலையை பார்த்து செல்ல போகிறோம். இதுதான் நடக்கும்.


ஒவ்வரு முறையும் அடிப்படி தேவைகளில் கை வைப்பது மட்டுமே அரசின் நோக்கம் என்பது மேலும் ஒரு முறை உண்மை ஆகி இருக்கிறது .

ஏற்கனவே ஆட்டோ ,தனியார் பேருந்துகளின் அணுகுமுறை எப்படி என்பது சொல்ல தேவை இல்லை .. டீசல் விலை  அதிகரிக்கமலேயே தனியார் பேருந்துகள் கட்டணத்தை உயர்த்துவார்கள் . அரசு பேருந்துகள் கட்டணத்தை உயர்த்துவதால் இவர்கள் தனது லாப சதவீதத்தை உயர்த்துவதற்காக தனது கட்டணத்தையும் உயர்த்துவது நிச்சயம். 

 திமுக ஆட்சியில் விலைவாசியை பேசியே ஒட்டு வாங்கியவர் .. தானும் அதையே செய்து கொண்டு இருக்கிறார்

கூட்டணி கட்சிகள் வாயை மூடி கொண்டு இருப்பது அதை விட கொடுமை.
கண்டத்திற்கு பொரட்டும் நடத்தும் அமைப்புகள் , அலுவகங்கள் அணைத்து மூடி , நெருக்கடியின் உச்சத்தை கொடுத்தல் மட்டுமே , இது முற்றிலுமாக நீக்க படும்.

இப்படி விலைவாசி ஏறி விட்டது என்று வேலை செய்பவர்களுக்கு அவர்களது முதலாளிகள் ஊதியத்தை உயர்த்தியா கொடுக்க போகிறார்கள் ? 

இலவசம் தருகின்றேன் என்ற பெயரில் , அதற்கு தேவை படும் பணத்தை , இப்படி பிடுங்கி இலசத்தை கொடுப்பதா அரசாட்சி ?
மீண்டும் வாகாளர்கள் ஏமாற்றபட்டார்கள் என்பது உண்மை.


கருத்துகள் இல்லை: