செவ்வாய், 29 நவம்பர், 2011

கபடி

வெஸ்ட் இண்டீஸ் இந்தியா இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருத்த போது  7  வது ஓவரின் பொது ஆட்டம் தடை பட்டது.காரணம் ரசிகர்களின் இடையூறு . இந்தியா 7 வது ஓவரிலேயே 3  விக்கட்டுகளை இழந்ததால்   பீல்டிங் செய்து கொண்டு  இருந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மீது பொருட்களை எறிந்து தங்களின் வீரத்தை காட்டி மகிழ்ந்து இருக்கிறார்கள்.


ஆசிய கண்டத்தை தவிர வேறு எந்த நாட்டிலும் இது போன்று அடிக்கடி பிரச்சனைகள் நடப்பதில்லை . இது தனி மனித ஒழுங்கீனத்தை  சார்ந்தது . ஒன்று இரண்டு ஆட்கள் செய்யும் இது போன்ற  செயலால் இந்தியாவின் மொத்த ஆட்களை பற்றிய எண்ணம் கேவலமான பார்வையாக மாறி கொண்டு இருக்கிறது.

இதை தடுப்பதற்காக அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்த காவல்துறை அதிகாரிகளை மிக நக்கலாக டிவியில் வர்ணனனை செய்து கொண்டு இருக்கும் மதன்லால் "இவர்கள் காக்கி உடை அணித்து கொண்டு இருப்பதால் "சைடு ஸ்க்ரீன்" அடிக்கடி குறுக்கே ஓடலாம் என்று நினைத்து விட்டார்கள் போல" என்று பேசி கொண்டு இருக்கிறார்.




கிரிக்கெட் வீரர்கள் ஒரு சின்ன காரியம் செய்தால் மீடியாவில் அதை காட்டுவது , ஒரு போட்டி நடைபெற்றால் அதற்க்கு ஒரு மாதம் முன்பே விளம்பரம் செய்வது, போட்டி நடைபெறும் மூன்று மணி நேரம் முன்பே அதை பற்றி பேசி கொண்டு இருப்பது, போட்டி நடந்து ரண்டு நாட்கள் அதை பற்றி பேசி கொண்டு இருப்பது , போட்டி நடந்து கொண்டு இருக்கும்போது ஒவ்வரு நிமிடத்திருக்கும் அணைத்து அலைவரிசையிலும் ஸ்கோர் செய்தியை தெரிவிப்பது என்று மீடியாவும் , வெற்றி பெற்றால் அதற்க்கு மாநில அரசில் இருந்து மத்திய அரசு வரை பரிசு கொடுப்பது பாராட்டுவது... இப்படி ஒரு பக்கம் போய் கொண்டு இருக்கிறது..

மறுபுறம்..... ???? தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டு .. கபடி. இது வரை நடந்த உலககோப்பை போட்டி  வென்று சாதனை படைத்தது கொண்டு இருக்கிறது 

இவர்களின் நிலைமை.. இந்த ஆண்டு கபடி உலகக்கோப்பையை இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி வென்றெடுத்துள்ளது என்ற செய்தி நம்மை மகிழ்ச்சிப்படுத்தும் முன், கோப்பையை வென்று எடுத்தபின் அவர்களின் நிலையை கேட்டபோது, ரொம்பவே பரிதாபமாக இருந்தது. கோப்பையை வென்று, தங்கி இருந்த விடுதியை விட்டு வெளியில் வந்தபோது, அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு இருக்கிறார்கள், ஏன் என விசாரித்தபோது, அதற்க்கான பணம் செலுத்தவில்லையாம் நிர்வாகிகள். சரி ஒரு வழியாக வெளியில் வந்தபோது, கோப்பையை எடுத்துக்கொண்டு வீட்டிற்க்கு போக ஒரு ஆட்டோ ரிக்க்ஷாவை பிடித்து போயுள்ளனர்.

எந்த ஒரு ரசிகனும் இவர்களை வரவேற்கவில்லை .. ( ரசிகர்கள் இருந்தால் தானே ) .. மீடியாக்கள் இதை கண்டுக்கவே இல்லை.. தனது விளம்பரத்துக்காக இவர்கள் அவமான பட்டதை மட்டுமே காட்டி கொண்டு இருந்தன . எந்த ஒரு மீடியாவும் இந்தியா  அணியில்  இடம் பேட்டர வீரர்கள் யார்? கேப்டன் யார் என்பதை கூட காமிக்கவில்லை .. அவர்களுக்கும் தெரியாது . எந்த ஒரு அரசும் இவர்களை கண்டு கொள்ள வில்லை ....இப்படி ஒரு விளையாட்டையே மறந்து விட்டார்கள் போலும்

இந்திய கபடி அணியை  கண்டு கொள்ள நினைப்பவர்களுக்கு  .....

Team India Kabaddi Players : Bittu Duggal, Sukvir Sarawa, Ekam, Nindi, Gurlal Ghanour, Gaggi, Gulzari, Sonu Jump, Sikander Kanjli, Dulla Surkhpuria, Kaka, Sandeep Dirba, Mangi 
 பெண்களின் பெயரை தேடினால் கிடைக்க கூட இல்லை.

இணையதளங்கள் :
http://kabaddi.org/

http://en.wikipedia.org/wiki/India_national_kabaddi_team

 http://punjabnewsline.com/content/world-cup-kabaddi-punjab-18-members-indian-kabaddi-team-announced















கருத்துகள் இல்லை: