பரவால.. ஆனா இந்த மாதிரி நிறைய இம்சைங்க இருக்கு பள்ளி கூடத்துல. நாம படிக்குற காலத்துல இருந்த தொந்தரவு விட இப்ப கண்டிப்பா அதிகம் ஆகி இருக்கும்னுதான் நினைக்குறேன்...
நாம் படிகுறப்ப இருந்த ஒரு எரிச்சலான விஷயம்..
காலாண்டு, அரையாண்டு தேர்வு முடிஞ்சவுடன் ஒரு வாரம் அல்லது பத்து நாள் விடுமுறை கிடைக்கும்.. அதுல புள்ளைங்க நிம்மதியா இருக்கலாம்னு பார்த்தா... அப்பா தருவாங்க நமக்கு வேலை .
அதாவது தேர்வு எழுதின எல்லா வினாத்தாள் எடுத்து எல்லாத்துக்கும் பதில் எழுதிட்டு வரணும்னு, அதுவும் CHOICE எதுவும் விட கூடாது.. எல்லா கேள்விகளுக்கும் விடை எழுதிட்டு வரணும். இதுல தமில் தாள் ல கட்டுரை வேற கொடுத்து இருப்பாங்க .. மொத்தம் 6 கட்டுரை எழுதிட்டு வரணும்னு இருக்கும்.. இத எதுக்கு எழுத சொல்றனுங்க .. இதுல என்ன கிடைச்சுட போகுதுன்னு இன்னமும் புரியல... இதுக்கு முதல்ல ஒரு தடை போடணும்.
---------------------------------------------
நம்ம கிராமங்கள்ல இருக்குற அரசு பள்ளிகூடம்ல (ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி) )அதாவது தமிழ் சினிமால வந்த அழகி,பள்ளிக்கூடம் படத்துல வந்த மாதிரி )படிக்குற குழந்தைங்களோட தின்பண்டங்கள் ரொம்ப வித்தியாசமானது... நானும் இந்த பள்ளி ல இருந்து படிச்சவன் ..அதுனால இந்த தின்பண்டம் ரொம்பவே பரிச்சயமானது ...
பள்ளிகூடத்துக்கு வெளியில் ஒரு பாட்டி கயிறு கட்டில் போட்டு உட்கார்ந்து இருக்கும்.. அல்லது சில பாட்டிங்க கீழ ஒரு தார்பாய் போட்டு உட்கார்ந்து இருக்கும்.. அதுல இருக்குற தின்பண்டங்கள்..
கயிறு மிட்டாய் - ( மிட்டாய் என்னவோ அவ்ளோ நல்ல இருக்காது ஒரு ஜெலுசில் மாத்திரை நடுவுல ஒரு சின்ன ஓட்டை போட்ட மாதிரி இருக்கும் , ருசி கூட அப்படியே .. அந்த ஓட்டைல ஒரு நூல் விட்டு கட்டி இருப்பாங்க.. அத சுத்துறதுனால முறுக்கேறி மிட்டாய் சுத்த ஆரம்பிக்கும்).
தேன்மிட்டாய் - ( சிவப்பு கலர் ல ஒரு மைக்ரோ இட்லி வடிவத்துல இருக்கும் .. இதுக்கு நடுவுல .. அநேகமா இது சக்கரி தண்ணியாதான் இருக்கனும் ( பாவு ) இருக்கும்.
இலந்தவடை , இலந்த தூள் , இலந்தபழம் ( இது எல்லாமே அநேகமா இப்பவும் பொட்டி கடைல இருக்கும்)
நெல்லிக்காய் ( பெரிய நெல்லிக்காய் ,சிறிய நெல்லிக்காய் ரெண்டும்).
கொய்யா, மாங்காய் ( அதுலயும் இந்த மாங்காய் கு அவ்ளோ கூட்டம் சேரும், அதுவும் சரியான மாங்காய கூட இருக்காது.. மாங்காய் பிஞ்சுன்னு தான் சொல்லணும்.. அதுக்கே அவ்ளோ demand இருக்கும்) .
கேக் மிட்டாய் - ( ஒரு மதிடி பாதி வெள்ளை கலர் ல ... இதோட டேஸ்ட் இன்னும் நியாபகம் இருக்கு .. இது ஒரு 0.5*0.5 cm சைஸ் ல இருக்கும்.. இத அப்படியே நிறைய ஒன்ன சேர்த்து வச்சுருப்பாங்க.. அதாவது டைரி மில்க் லுக் ல ).
அப்புறம் நாவல் பழம், பாதணிக்காய் இதுவும் ஒரு ஓரமா இருக்கும். இது தவிர வடிவேலு சொன்ன குருவி ரொட்டி கூட இருக்கும்.
இது எல்லாமே அஞ்சு பைசா ல இருந்து 50 பைசா வரைக்கும்தான் இருக்கும். அதுக்கு கூட படிக்குற பசங்க கிட்ட கடன் கேட்டு , இல்ல புடுங்கி சாப்பிட சந்தோசம் இப்ப pizza சாப்டுரதுல வர்ற சந்தோசத்த விட அதிகம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக