செவ்வாய், 10 ஏப்ரல், 2012

"ஷெல்" பெட்ரோல் பங்கில் நடந்த சம்பவம்



ஹும்ம் கடந்த பத்து நாட்களாக தெரிந்தோ தெரியாமலோ சென்னையில்  கெட்டதை மட்டுமே பார்த்த எனக்கு .. அதிசயமாக ஒரு நல்ல விஷயம் என் கண்ணில் அக பட்டது ..

நம்மை ஏமாற்றுகிறார்கள்  என்று தெரிந்தே .. சரி இவர்களுக்கு காசு கொடுப்பதால் நம் சொத்தா அழிந்து விட போகிறது அல்லது நம்மை ஏமாற்றி வீடா கட்டி விட போகிறார்கள் என்று பிச்சை கேட்பவர்களிடமும்.. ஊருக்கு போக காசு இல்லை என்று ரோடு ஓரத்தில் இருபவர்களிடம் காசு கொடுத்தாலும் ... அதை வாங்கி கொண்டு நம்மை ஏமாற்றி விட்டதாக அதில் சிலர் நகையாடுபவர்களை  வெறுத்து போய் பார்ப்பதும் ... வேண்டுமெண்டே EB  யில் வேலை செய்யும் பணி ஆள் வீட்டுகாரருக்கு தெரியாமல் தெருவோரம் இருக்கும் வீட்டில் இருக்கும் "பீஸ் கட்டையை " பிடுங்கி .. வீட்டுகாரரை போன் செய்ய வைத்து அதை  சரி செய்வது போல் காசு பிடுங்குவதை பார்ப்பதும் தொடர்ந்தாலும் ...

ஒரு நல்ல விஷயம்  என் கண்ணனுக்கு கிடைத்தது .

"பூந்தமல்லி  " ஷெல்" பெட்ரோல் பங்க் ".

இங்கு நண்பரோட பெட்ரோல் போட சென்ற போது.. இவர்களது "  CUSTOMER SERVICE"  இதுவரை எங்குமே நான் பார்த்திறாத  ஒன்று .

நம் வண்டி பெட்ரோல் போட அருகில் செல்லும்போது  அங்கு பெட்ரோல் போடுபவர் இரு கை கூப்பி தமிழ் கலாச்சாரத்துடன் வணக்கம் சொல்கிறார் .
 ( ஒருவர் பெரியவர் இன்னொருவர் ஒரு 20  வயதிற்குள் இருக்கும் நபர் ).. வருபவர் எத்தனை வயது காரார்க இருந்தாலும் எப்படி இருந்தாலும் இதே மரியாதை தொடர்கிறது. பெட்ரோல் போட்டதும் வண்டியில் காற்று சரியாய் இருகிறதா என்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று அதற்கும்  கனிவுடன்  உதவுகிறார்கள் . செல்லும்போது கனிவுடன் நன்றியும்  தெரிவிக்கிறார்கள்  . ஒரு முறை சென்றதும் .. அடுத்த முறையில் இருந்து எங்கு சென்றாலும் இந்த பங்கில் பெட்ரோல் அல்லது டீசல் போடுவது என்று இப்போது தொடர்ந்து வருகிறது .. நண்பர்களிடமும் இதையே செய்ய சொல்கிறேன்..

இன்முகத்துடன் வேலை செய்தால் கண்டிப்பாக அந்த வியாபாரம் நன்றாக நடக்கும் என்பதை இவர்கள்  நன்கு புரிந்து கொண்டு இருகிறார்கள்.

ஆங்கில வலைப்பூ எழுதுபவர்கள் இதை படித்தால் , தாரளமாக இதனை மொழி பெயர்த்து போஸ்ட் செய்யவும் ... இன்முகத்துடன் வேலை பார்க்கும் இவர்களுக்கும் அங்கீகாரம் கிடைக்கும் ... இவைகளை பார்த்து மற்றவர்களும் இது போல் பணி புரிய ஆரம்பிப்பார்கள் ..

8 கருத்துகள்:

இராஜராஜேஸ்வரி சொன்னது…

இன்முகத்துடன் வேலை பார்க்கும் இவர்களுக்கும் அங்கீகாரம் கிடைக்கும்

கவனிக்கவைக்கும் பகிர்வு..

தமிழ் மீரான் சொன்னது…

பூந்தமல்லி ஷெல்... அட.. நம்ம ஏரியா! எனக்கும் அனுபவம் உண்டு!

Guna சொன்னது…

@ tamil meeraan - ungalukkum intha anubavam kidaithu irukkumey? @raja rajeshwari - karuthukalukku nandri..

மாலதி சொன்னது…

உண்மையில் நல்ல செய்தி பாராட்டுகள் தொடர்க ....

மனோ சாமிநாதன் சொன்னது…

தங்கள் வேலையை இன்முகத்துடன் செய்யும் இவர்களுக்கு ‌நீங்களும் அங்கீகாரம் தந்து, மற்ற‌வர்களையும் அங்கீகாரம் கொடுக்கச் சொல்லும் அக்கறை அருமை! நல்ல பதிவு!!

Guna சொன்னது…

@ மனோ சாமிநாதன் THANKS FOR THE COMMENTS

Athisaya சொன்னது…

இன்முகத்துடன் வேலை பார்க்கும் இவர்களுக்கும் அங்கீகாரம் கிடைக்கும்////
nichamayai..

Unknown சொன்னது…

கண்டிப்பாக இன்முகதுடன் வேலை செய்தால் வேலையின் கஷ்டம் கூட தெரியாது, வாழ்துக்கள்