வியாழன், 18 ஜூலை, 2013

மெல்ல இறந்துபோகும் வரலாறு

நான்கு நாட்களுக்கு முன்பு காலையில் பேருந்தில் வரும்போது பள்ளி செல்லும் குழந்தையுடன் பேச நேரிட்டது . ஐந்தாம் வகுப்பு படிக்கும் குழந்தை ஏதோ ஒரு  மெட்ரிக்  பள்ளியில் படிக்கும் குழந்தை.. விளையாட்டாக பேசி கொண்டு இருக்கும்போது  ,அன்றைய தினம் காமரஜர் தினம் என்பதால் , ரோடு ஓரங்களில் இருந்த அவரது புகைப்படத்தை காட்டி கேட்கும்போது , அவர் யாரென்று சிறுவனுக்கு தெரியவில்லை.  மேலும் சில தேச  கேட்கும்போது , ஒரு கேள்விக்கு உண்மையாகவே ஒரு பதில் வந்தது. அவரை (பாரதி )பற்றி சென்ற வருட சிலபஸ்ஸில்  வந்தது இப்போது இல்லை என்றும் மேலும் ஒருவரை கேட்கும்போது (நேதாஜி ) அது அடுத்த ஆருடம் என்றும் சொன்னான்.
அப்போது புரிந்தது இப்போதெல்லாம் தேச தலைவர்கள் மாணவர்களுக்கு மதிப்பெண்  வாங்கவும் , ஆசிரியர்களுக்கு மாணவர்களை அடுத்த கல்வியாண்டுக்கு அனுப்பவும் மட்டுமே பயன்படுகிறார்கள் என்று .
தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக வைத்த பாடங்களையெல்லாம் , மதிப்பெண்களுக்காக மட்டுமே இதை படிக்க வேண்டும், இந்த படத்தில் இருந்து கேள்வி வராது, இந்த கேள்விகளை சாய்ஸில்  விட்டு விடலாம் என்று மாணவர்களின் மனநிலையை சில ஆசிரியர்களே தனது அறிவுரையாலும் , பாடம் நடத்தும் திறனாலும் தள்ளி விட்டு இருக்கிறார்கள்.
மேலும் நடுத்தர பள்ளிகளில் ஆசிரியர்கள்  தங்களுக்குள்ளே இருக்கும் ஈகோ  பிரச்சனைகளில் நான் எடுக்கும் பாடத்தில் மாணவர்கள் கற்று கொண்டார்களோ இல்லையோ அனால் மற்ற ஆசிரியர்  நடத்தும் பாடத்தை விட தனது  சுப்ஜெக்டில்  அனைவரும் தேர்ச்சி பெற்றால் போதும் என்று குறுக்கு வழியில்தான்  சொல்லி தருகிறார்கள் .ஏற்கனவே குறுக்கு வழியில் தேர்ச்சி பெற எதையெல்லாம் படிக்க வேண்டாம் என்று மனநிலைக்கு ஆளாகியிருக்கும் மாணவர்கள் , இதனால் கற்றுகொள்வதை விட்டுவிட்டு மதிப்பெண்களுக்காக மட்டுமே பாடத்தை  படிக்கிறார்கள்.

கேள்வி என்பது மதிப்பெண்களுக்கான கேள்வி என்பதை விட்டு , நாம் தெரிந்து  கொண்டதை பகிர போகிறோம் என்று மாணவர்கள் பதில் எழுதும்போதும் ,புத்தகத்தில் எப்படி பதில்  இருக்கிறதோ அதே போல் அச்சு  பிசகாமல் பதில் இருக்க வேண்டும் என்று சில ஆசிரியர்கள் எண்ணம் மாறும்போதும் , கேள்விகள் மதிப்பெண்களுக்காக கேட்கவில்லை நீ விஷயங்களை தெரிந்துகொண்டாயா  என்பதை அறிந்துகொள்ளவே என்று மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உணர்த்தும்போதும் மட்டுமே  வரலாறும் , தேச தலைவர்களும் உயிர் பெறுவார்கள்.

2 கருத்துகள்:

s suresh சொன்னது…

சிறப்பாக சொன்னீர்கள்! கல்வி மதிப்பெண்களுக்கு மட்டும் அன்று இதை ஆசிரியர்கள் உணர வேண்டும்!

Guna சொன்னது…

Thanks for ur comments Mr.S Suresh