போலீஸ் என்றாலே லஞ்சம்
வாங்குபவர்கள், முரட்டு தனமான அணுகுவார்கள் என்ற கண்ணோட்டம் இருக்கிறது .
பெரும்பாலும் அது உண்மையாகவே இருக்கிறது .
காவல்துறை என்பதை மேம்படாமல் இருப்பதற்கும் , மேம்படுத்தவும் இருக்கும் காரணம் " சம்பளம்".
சம்பாதிற்பதற்கு என்று பல வேலைகளும் , தொழில்களும் இருந்தாலும் மேலும் அரசு
வேலைகளில் பல பிரிவுகள் இருந்தாலும் போலீஸ் என்றால் ஒரு மிடுக்கு இருப்பது
உண்மை .ஆனால் அவர்களுக்கு தனியார் மற்றும் மற்ற அரசு வேலையில் கிடைக்கும் ஊதியம் இருக்கிறதா
என்று பார்த்தால் இல்லை.
தற்போது காவல்துறை தேர்விற்கு
செல்லும் பெரும்பாலனோர் அதிகம் படிக்காதவர்கள் அல்லது சரியாக
படிக்காதவர்கள் மட்டுமே . இந்த வகுப்பினருக்கு காவல்துறையில்
கொடுக்கப்படும் சம்பளம் போதுமானதாக இருக்கிறது , மேலும் லஞ்சம் வாங்கி
சம்பாதித்து விடலாம் என்ற எண்ணத்திலும் லஞ்சம் கொடுத்தோ அல்லது வேறு
வழிகளிலோ வேலையில் சேர்ந்து விடுகின்றனர். ஒழுங்கான சேருபவர்களும் வருமானத்திற்கும், கௌரவதுக்கும் , இதர வருமானத்திற்கும் மட்டுமே வேலையில் சேருகிறார்கள்.
நன்றாக
படிப்பவர்களும், பொறியயல் படித்தவர்களும், ஏன் காவல்துறையை
தேர்ந்தெடுப்பதில்லை ? படிப்பிற்கு ஏற்ற சம்பளம் கிடைக்காததால் மட்டுமே
அவர்கள் காவல் துறையில் சேருவதில்லை. சம்பளத்திற்காக மட்டுமே இந்த துறையில்
சேருவது தவறு என்றாலும் , மற்ற அரசு வேலைகளில் ,, தனியார் வேலைகளை
இருக்கும் வேலைப்பளுவை விட காவல் துறையில் இருபது அப்பட்டமான உண்மை.
வேலைபளுவிற்கு சரியான சம்பளம் காவலர்களுக்கு கிடைப்பதில்லை என்பதும் உண்மை.
விடுமுறை
இல்லாமல் , நேரம் இல்லாமல் உழைக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் அடிப்படை
காவலர்களில் இருந்து உயர் அதிகாரிகள் வரை அனைவருக்கும் மற்ற துறையை விட
சம்பளம் மிக குறைவே .
சம்பளம் அதிர்கரிக்கபடும் பட்சத்தில் ,
அதிகம் படித்தவர்கள் , முற்போக்கு சிந்தனை உள்ளவர்கள் வேலையில் சேரும்
வாய்ப்பும் அதிகம், லஞ்சம் குறைவதற்கும் வாய்புகள் மிக அதிகம். மேலும்
அணைத்து வகையிலும் காவல்துறை முன்னேற இம்மாதிரி ஆட்கள் இருந்தால் மட்டுமே
சாத்தியம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக