நான்கு நாட்களுக்கு முன்பு காலையில் பேருந்தில்
வரும்போது பள்ளி செல்லும் குழந்தையுடன் பேச நேரிட்டது . ஐந்தாம் வகுப்பு
படிக்கும் குழந்தை ஏதோ ஒரு மெட்ரிக் பள்ளியில் படிக்கும் குழந்தை..
விளையாட்டாக பேசி கொண்டு இருக்கும்போது ,அன்றைய தினம் காமரஜர் தினம்
என்பதால் , ரோடு ஓரங்களில் இருந்த அவரது புகைப்படத்தை காட்டி கேட்கும்போது ,
அவர் யாரென்று சிறுவனுக்கு தெரியவில்லை. மேலும் சில தேச கேட்கும்போது ,
ஒரு கேள்விக்கு உண்மையாகவே ஒரு பதில் வந்தது. அவரை (பாரதி )பற்றி சென்ற
வருட சிலபஸ்ஸில் வந்தது இப்போது இல்லை என்றும் மேலும் ஒருவரை கேட்கும்போது
(நேதாஜி ) அது அடுத்த ஆருடம் என்றும் சொன்னான்.
அப்போது
புரிந்தது இப்போதெல்லாம் தேச தலைவர்கள் மாணவர்களுக்கு மதிப்பெண் வாங்கவும்
, ஆசிரியர்களுக்கு மாணவர்களை அடுத்த கல்வியாண்டுக்கு அனுப்பவும் மட்டுமே
பயன்படுகிறார்கள் என்று .
கேள்வி என்பது மதிப்பெண்களுக்கான கேள்வி என்பதை விட்டு , நாம் தெரிந்து கொண்டதை பகிர போகிறோம் என்று மாணவர்கள் பதில் எழுதும்போதும் ,புத்தகத்தில் எப்படி பதில் இருக்கிறதோ அதே போல் அச்சு பிசகாமல் பதில் இருக்க வேண்டும் என்று சில ஆசிரியர்கள் எண்ணம் மாறும்போதும் , கேள்விகள் மதிப்பெண்களுக்காக கேட்கவில்லை நீ விஷயங்களை தெரிந்துகொண்டாயா என்பதை அறிந்துகொள்ளவே என்று மாணவர்களுக்கு ஆசிரியர்கள் உணர்த்தும்போதும் மட்டுமே வரலாறும் , தேச தலைவர்களும் உயிர் பெறுவார்கள்.
2 கருத்துகள்:
சிறப்பாக சொன்னீர்கள்! கல்வி மதிப்பெண்களுக்கு மட்டும் அன்று இதை ஆசிரியர்கள் உணர வேண்டும்!
Thanks for ur comments Mr.S Suresh
கருத்துரையிடுக